Friday, August 14, 2009

ஸ்மைல் ப்ளீஸ்....

ஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர்

"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?"

என்று மற்றொருவரைக் கேட்கிறார்.

"பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?"

எடை பார்க்கும் மிஷின்.........

நம்ம சர்தார்ஜி ஒரு நாள் கடை வீதிக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார். அப்போது அவர் குழந்தை தனது எடையய் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தது. ஆணால் குழந்தை உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை. அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார். குழந்தையும் நாணையத்தை போட்டது.

உடனே ஒரு கார்டு வந்து விழுந்த்தது.

எடை 0 என்று

கண்ணாடிக் கடையில் சர்தார்ஜி....

சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க...

கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..

சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.

நேர்முகத்த ேர்வில் சர்தார்ஜி....

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”.

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.”

ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும் .....

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்.

எய்ட்ஸ் பயமா?.....

ஒரு முறை சர்தாரும் நண்பர்களும் (சர்தாரல்லாத) இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறியிடம் மாட்டிக் கொண்டனர். வழிபறி தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான்.

பயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கலட்டி கொடுத்து விட்டனர். ஆனால் நம் சர்தார் மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார். கோபமான வழிபறி ஊசியால் சர்தார் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான். சர்தார் கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், சர்தாரிடம் "ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே "என்று கேட்டதற்கக்கு சர்தார் கூலாக சொன்னார், "எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே" என்றார்.

ரயிலில் தூங்கிய சர்தார் ...

ஒரு முறை ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த சர்தாருக்கு தூக்கம் தூக்கமாக வந்தது. தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என்பதால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு யோசனை வந்தது, அருகில்

உட்கார்ந்திருந்த ஓருவரிடம், தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்படியும், அதற்கு இருபது ரூபாய் தருவதாகவும் சொன்னார். அருகே இருந்த அந்த ஆள் அதற்கு ஒத்துக்கொண்டு, பணத்தையும் வாங்கிக் கொண்டார். சர்தார் நன்கு தூங்க தொடங்கினார். சர்தாரை எழுப்பி விடுவாதாக சொன்ன நன்பருக்கு, ஒரு ஆளை எழுப்பி விடுவதற்க்கு, இருபது ரூபாய் வாங்குவது அவருக்கு கஸ்டமாக இருந்தது. தான் வாங்கிய பணத்துக்கு மேலும் உபயோகமாக வேறு ஏதாவது சர்தாருக்கு செய்ய வேண்டும் என நினைத்தார். தான் ஓரு பார்பர் (முடி திருத்துபவர்) என்பதால், சர்தார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஷேவ் செய்துவிட்டு (தாடியையும் எடுத்து விட்டார்), சர்தார் இறங்கக்கூடிய இடம் வந்ததும் எழுப்பியும் விட்டார். இதை எதையும் அறியாத சர்தார் நேரே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, தன்னை கண்ணாடியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். தன் மனைவியை அழைத்து சொன்னார், "ரயிலில் அந்த மடையன் என்னை எழுப்பி விடுவதற்க்கு பதிலாக வேறு யாரையே எழுப்பிவிட்டு விட்டான்" என்றார்.

தொலைபேசி அழைப்பு .....

சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.

துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.

அடி வாங்கிய சர்தார்கள் ....

இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.

முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம், அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".
'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார்.
"என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".
இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது. அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை. அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை. வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள். அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மற்ற சர்தார். "வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்..

சிறந்த டிரைவர்..?

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'

கொலஸ்ட்ரால் எங்கே?........

ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."

எத்தனை கோழி? .....

ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.

சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"

நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."

சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?

நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"

சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."

கொசுவலையுட ன் போர் ....

இந்தியாவுக்கும்-பாகிஸ்தான� �க்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்டு

ஒரு சர்தார் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஓடி விட்டனர். சர்தாரின் வீர செயலை பாரட்டி எல்லோரும், சர்தாரிடம் கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர். அதற்கு சர்தார் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துலைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுல் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்..இராணுவத்திலிருந்து இந்த சர்தாருக்கு ஓய்வு கிடைத்த பிறகு அவருடை மகனுக்கு அங்கே வேலை கிடைத்தது. இன்னொரு முறை போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டது. இம்முறை சர்தார்(மகன்) மட்டும் மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாக்கிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். ஆனால் எதிரிகள் திருப்பி சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரை பார்க்க வந்த சகவீரர் ஒருவர் கேட்டார் "உன் அப்பாவாவது உடம்பில் கொசுவலையை போர்த்திக் கொண்டு எதிரியை நோக்கி சுட்டார், நீ ஏன் ஒன்றுமே அணியாமல் வெளியே வந்தாய்?" அதற்க்கு சர்தார் சொன்னார், "நான்தான் உடம்பில் ஓடோமாஸ் (கொசு கடிக்காமல் இருக்க உடம்பில் சிக்கொல்லும் ஒரு வகை மருந்து) சியிருந்தேனே" என்றார்.

அன்னையின் கடிதம்...

அன்புள்ள பந்தாவுக்கு,நான் இந்த கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன், ஏன்னா நான் வேகமா எழுதினா உன்னால படிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். நீ வீட்டைவிட்டு போகும் போது இருந்த வீட்ல இப்ப நாங்க இல்லை. நம்ம வீட்டிலிருந்து 20 மைல் து¡ரத்தில்தான் எல்லா ஆக்சிடன்டும் நடக்குதுன்னு பேப்பர்ல வந்த அன்னைக்கே அந்த வீட்டை உன் அப்பா காலி பண்ணிவிட்டார். புதுவீட்டு அட்ரசை என்னால இப்ப உனக்கு எழுத முடியாது, ஏன்னா, இதற்கு முன்னால இங்கிருந்த சர்தார் இந்த வீட்டு நம்பரை அவன் புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு போய்விட்டானாம். ஏன்னா அவன் வீட்டு அட்ர¨¨ மாற்ற வேண்டாம் பாரு..இந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு வாஷிங் மிசின் கூட இருக்கிறது. ஆனா அது ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறது. போன வாரம் மூனு சட்டையை போட்டு சங்கிலியை பிடித்து இழுத்து விட்டேன். பிறகு கொஞ்சம் சத்தம் கேட்டது, ஆனா சட்டைகள் இதுவரை எங்கு போனதுன்னு தெரியல. கிளைமேட் ரொம்ப மோசமில்கை, போன வாரம் இரண்டு முறை மழை பெய்தது, முதன் முறை மூன்று நாட்களும், இரண்டாவது முறை நான்கு நாட்களும் பெய்தது. நீ கோட்டு கேட்டிருந்தாய் அல்லவா? அனுப்பியிருக்கிறேன். மெயிலில் அனுப்புவதற்க்கு கோட்டு மிகவும், எடை அதிகமாக இருந்ததால், அதிலிருந்த பட்டன்களை அறுத்து எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் போட்டிருக்கிறேன். சுடுகாட்டிலிருந்து, பாட்டியை எரித்ததிற்கான பில் வந்திருக்கிறது. இந்த முறை பணம் கட்டாவிட்டால் பாட்டியையே திருப்பி இங்கு அனுப்பி விடுவாதாக எழுதியிருக்கிறார்கள். மறுபடியும் பாட்டி இங்கு வந்துவிட்டால் தங்குவதற்கு ரொம்ப ககடமாக இருக்கும். உன் அப்பா மயானத்தில் புல்வெட்டும் வேலை ஒன்றில் சேர்ந்திருக்கிறார். நல்ல வேலை, அவருக்கு கீழே 500 பேர் இருக்கிறார்களாம், பெறுமையாக எல்லோரிடமும் சொல்கிறார். முக்கியமான செய்தி, உன் அக்காவுக்கு இன்று காலை குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை, அதனால நீ இப்ப மாமாவா இல்லை மாமியா என்று எனக்கு புரியல. உன் மாமா ஜீதேந்தர் போன வாரம் தவறுதலா விஸ்கி வாட்டுக்குள்(பெரிய பாத்திரம்) விழுந்துவிட்டார். காப்பாற்றப் போன இரு நன்பரையும் போட்டு அடி அடின்னு அடித்துவிட்டு கடைசியில் மூழ்கி செத்து போனார், அவரை எரிச்சப்ப மூன்று நாள் முழுசா எரிஞ்சாராம். வேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை. மற்றவை அடுத்த மடலில்..அன்புடன் உன் அம்மா..

ஹாஸ்பிட்டலில் நண்பர்....

நோய்வாய்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்ட நண்பரை பார்க்க சர்தார் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்றுக் கொண்டிருந்த சர்தார், நண்பரின் நிலைமை திடிரென்டு மிகவும் மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார். அந்த நிலையில் பேச முடியாத நண்பர் செய்கையால் ஒரு பேப்பரும், பேனாவும் வேண்டுமென கேட்டார். அவசரமாக ஏதோ எழுதி கொண்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே அவரைவிட்டு பிரிந்தது. சர்தார் அந்த பேப்பரில் தன் குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்கக் கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் சர்தார், நண்பர் வீட்டுக்கு போய் துண்டு பேப்பர் விஷயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி அதைப் படித்துப் பார்க்க சொன்னார். பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார், அப்பொழுதுதான் சர்தார் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் "நீ என் ஆக்சிஜன் குழாய் மீது நின்றுக் கொண்டிருக்கிறாய் என்று எழுதியிருந்தது.."

முதல் நாள் பள்ளியில்...

முதன் முறையாக ஸ்கூலுக்கு சென்று விட்டு திரும்பிய பந்தாசிங் தன் தந்தையிடம் வந்து அன்று ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். "அப்பா இன்றைக்கு ஸ்கூலில் ஸ்பெல்லிங் பற்றி கிளாஸ் எடுத்தார்கள், அதில் நான் மட்டும்தான் எல்லா எழுத்தையும் சரியாக சொன்னேன். மற்ற பசங்கள் யாருமே சரியா சொல்லவில்லை. அது ஏன்பா, நான் சர்தார் என்பதாலா?." அதற்க்கு அப்பா சொன்னார்,

"இல்லை மகனே, நீ ஒரு இன்டலிஜென்ட் பாய் அதனால்தான் சரியாக சொல்லி இருக்கிறாய். (அறிவு கொழுந்துங்கிறார்)..""அப்பா, பிறகு கணக்கு கிளாஸ் நடந்தது. அதில் எல்லோரையும் 1-லிருந்து 20-வரைக்கும் சொல்ல சொன்னார்கள். ஆனால் எல்லோரும் 1 லிருந்து 10 வரைக்கும்தான் சொன்னார்கள், நான் மட்டும்தான் ஒழுங்கா 20 வரைக்கும் சொன்னேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?". அப்பா, "நோ.. நோ.. மகனே, நீ ஒரு அறிவு கொழுந்துடா, அதனாலதான்..""அப்பா, இன்று மெடிக்கல் செக்-அப் கூட நடந்தது.. அங்க வந்த எல்லா பசங்களும் என்னைவிட ரொம்ப குட்டையா இருந்தாங்க, ஆனா நான் மட்டும் அவங்களைவிட இரண்டு மடங்கு உயரமாக இருந்தேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?".

அப்பா சொன்னார், "இல்லை மகனே, உனக்கு வயசு 31 ஆகிறது இல்லையா? அதனாலதான்..".

எத்தனை இட்லி? ....

ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,

'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.

உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.

சிறுநீர் கொண்டு வா! ....

ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.

டாக்டர்: என்ன இவை?

சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.

வேலை வாய்ப்பகத்தில்...

அரசு பணிக்காக வேலை வாய்ப்பகத்தில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார் ஒரு சர்தார். மிக கவனமாக ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார். SEX என்று குறிப்பிட்டிருந்த இடத்திற்கு என்ன எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, 'மாதம் ஒரு முறை' குறிப்பிட்டார்.

இதை கவனித்த அருகில் இருந்த ஒருவர், சர்தாரிடம் சொன்னார், "அதில் ஆணா அல்லது பெண்ணா என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்" என்று சொன்னார். உடனே சர்தார், 'ஆண்/பெண் NN blem' என்று திருத்தி எழுதினார். அதற்க்கு பிறகு Salaaa EEEecced: என்ற இடத்தில் 'Yee' என்று எழுதினார். விண்ணப்பத்தின் கீழ் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்த குறிப்புகளை படித்துவிட்டு (IIIIIIcciii), உடனே விண்ணப்பத்தை கிழித்து போட்டு விட்டார். பக்கத்திலிருந்த ஒருவர் "ஏன் என்னாச்சு கிழித்து போட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டதற்கு சர்தார் சொன்னார், "நான் இப்ப அவசரமா டெல்லி போகனும், ஏன்னா இந்த விண்ணப்பத்தை அங்கதான் பூர்த்தி செய்யனும்னு இதிலே போட்டிருக்கு" என்றார். அருகிலிருந்தவர் குழம்பிப் போனவராய், "எங்கே அப்படி போட்டிருக்கு காண்பிங்க பார்க்கலாம்" என்றதற்க்கு, சர்தார் காண்பித்த இடத்தில் " Fill The Application In Capital" என்று எழுதியிருந்தது..

என்னையா முந்துகிறாய்...

ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக் கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர்.

முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்...

எது என் குதிரை..?

குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.

சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".

அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.

அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக் கொண்டு நின்றது. இதைப்பார்த்து கவலைப்பட்ட சந்தா சொன்னார், "சரி இனி சிகப்பு குதிரை உன்னது, வெள்ளை என்னது".

ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை....

சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.

நண்பர்: ஏன்?

சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது

நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?

சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.