Friday, August 14, 2009

ஸ்மைல் ப்ளீஸ்....

ஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர்

"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?"

என்று மற்றொருவரைக் கேட்கிறார்.

"பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?"

எடை பார்க்கும் மிஷின்.........

நம்ம சர்தார்ஜி ஒரு நாள் கடை வீதிக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார். அப்போது அவர் குழந்தை தனது எடையய் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தது. ஆணால் குழந்தை உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை. அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார். குழந்தையும் நாணையத்தை போட்டது.

உடனே ஒரு கார்டு வந்து விழுந்த்தது.

எடை 0 என்று

கண்ணாடிக் கடையில் சர்தார்ஜி....

சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க...

கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..

சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.

நேர்முகத்த ேர்வில் சர்தார்ஜி....

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”.

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.”

ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும் .....

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்.

எய்ட்ஸ் பயமா?.....

ஒரு முறை சர்தாரும் நண்பர்களும் (சர்தாரல்லாத) இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறியிடம் மாட்டிக் கொண்டனர். வழிபறி தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான்.

பயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கலட்டி கொடுத்து விட்டனர். ஆனால் நம் சர்தார் மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார். கோபமான வழிபறி ஊசியால் சர்தார் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான். சர்தார் கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், சர்தாரிடம் "ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே "என்று கேட்டதற்கக்கு சர்தார் கூலாக சொன்னார், "எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே" என்றார்.

ரயிலில் தூங்கிய சர்தார் ...

ஒரு முறை ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த சர்தாருக்கு தூக்கம் தூக்கமாக வந்தது. தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என்பதால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு யோசனை வந்தது, அருகில்

உட்கார்ந்திருந்த ஓருவரிடம், தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்படியும், அதற்கு இருபது ரூபாய் தருவதாகவும் சொன்னார். அருகே இருந்த அந்த ஆள் அதற்கு ஒத்துக்கொண்டு, பணத்தையும் வாங்கிக் கொண்டார். சர்தார் நன்கு தூங்க தொடங்கினார். சர்தாரை எழுப்பி விடுவாதாக சொன்ன நன்பருக்கு, ஒரு ஆளை எழுப்பி விடுவதற்க்கு, இருபது ரூபாய் வாங்குவது அவருக்கு கஸ்டமாக இருந்தது. தான் வாங்கிய பணத்துக்கு மேலும் உபயோகமாக வேறு ஏதாவது சர்தாருக்கு செய்ய வேண்டும் என நினைத்தார். தான் ஓரு பார்பர் (முடி திருத்துபவர்) என்பதால், சர்தார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஷேவ் செய்துவிட்டு (தாடியையும் எடுத்து விட்டார்), சர்தார் இறங்கக்கூடிய இடம் வந்ததும் எழுப்பியும் விட்டார். இதை எதையும் அறியாத சர்தார் நேரே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, தன்னை கண்ணாடியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். தன் மனைவியை அழைத்து சொன்னார், "ரயிலில் அந்த மடையன் என்னை எழுப்பி விடுவதற்க்கு பதிலாக வேறு யாரையே எழுப்பிவிட்டு விட்டான்" என்றார்.